search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் கடத்தல்"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கரிவேட்டான் கால்வாயிலிருந்து மூட்டையுடன் பைக்கில் வந்தவரை போலீசார் மடக்கினர். போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் பைக்கை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, பைக் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாமண்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சின்னராசை (வயது 25) கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
    • போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.

    இதனை தடுக்க சிறப்பு படை போலீசார், இன்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரை, மடக்கி பிடித்தனர்.

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சிறப்பு படை போலீசார் பேசிக் கொண்டிருந்ததை, ஓட்டு கேட்ட ஜோதி அங்கிருந்து வேகமாக ஓடினார். கிராமத்தை ஒட்டியுள்ள டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.

    நீங்கள் என்னை கைது செய்தால், நான் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.

    அவரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் மணல் கடத்த முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.
    • விசாரணையில் அவர்கள் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். மங்களம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்த முயன்ற மூன்று பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    விசாரணையில் அவர்கள் மங்களம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்(வயது29), தேவன்(வயது30), சாந்தகுமார்(வயது28) என்பது தெரியவந்தது. குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

    • நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மூக்கனூர் அனந்தாங்கல் ஏரியில் 3 பேர் 2 டிராக்டர்களில் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த காவலர்கள், அங்கு விரைந்து சென்று, மண் கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் மணிகண்டன்(25), சிவா(25), உலகுடையாம்பட்டை சேர்ந்த மாதேஷ்(20) ஆகியோரை காவலர்கள் கைது செய்து, மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி, மதியழகன், பன்னீர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டிராக்டருடன் தப்பியவருக்கு வலைவீச்சு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி மேற்பார்வையில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் கள் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் விண்ண மங்கலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரின் டிராக்டரில் ஆற்று மணல் கடத்தப்பட்டு வந் துள்ளது. அதிகாரிகளை பார்த்ததும் மணல் ஏற்றிவந்தடிரெய் லரை கழற்றிவிட்டு டிராக்டரை ஜெகன் ஓட்டிச் சென்று விட்டார்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதன்பேரில் டிரெய்லரை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இது தொடர்பாக தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபு தீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் மணல் கடத்தியவர் ஆரணியை சேர்ந்த ராமராஜ் என்பது தெரிந்தது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆரணி ஆற்றின் அருகே மங்களம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் மணல் கடத்தியவர் ஆரணி, புதிய தமிழ் காலனியைச் சேர்ந்த ராமராஜ் (வயது 31) என்பது தெரிந்தது.

    போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிள் மணல் கடத்தி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.
    • பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சங்கர், தலைமை காவலர் செல்லமுத்து ஆகியோர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். ஆரணி ஆற்றில் மங்களம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மணல் கடத்தி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்து மணலுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் ஆரணி, புதிய தமிழ் காலனியைச் சேர்ந்த ராமராஜ்(வயது31) என்பது தெரிய வந்தது. எனவே, போலீசார் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    • வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார்
    • போலீசார் தடுக்க வலியுறுதத்ல்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவாணம் பாலாற்று பகுதியில் இருந்து லாரியில் 2 யூனிட் மணல் திருட்டுத்தனமாக அள்ளிக்கொண்டு கட்டுப்படி சாலை வழியாக நேற்று இரவு சென்றது.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்தனர். இரவு நேரங்களில் மணல் கடத்தி வரும் லாரிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை போலீசார் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த லாரியின் உரிமை யாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இனிமேல் இந்த பகுதி வழியாக மணல் எடுத்து வரமாட்டேன் என உறுதி அளித்தார்.

    இதை அடுத்து லாரி விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீஸ்காரர் மயூரா மீது டிராக்டரை ஏற்றினார். இதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சித்தண்ணாவை கைது செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் நெலோகி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் மயூரா (வயது51). இவர் ஜேவர்தி தாலுகா நாராயண்பூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது போலீஸ்காரர் மீது டிரைவர் டிராக்டரை ஏற்றினார். இதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சித்தண்ணாவை கைது செய்தனர். அவர் போலீஸ் மீது டிராக்டர் ஏற்றியதை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மந்திரி பிரியங்கா கார்கே கூறும்போது, மணல் கடத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளேன். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

    • மாட்டுவண்டிகள் பறிமுதல்
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில், ஆம்பூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வந்த 3 பேரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

    மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு ஈடுபட்ட மாதனூரை சேர்ந்த பார்த்திபன் (வயது 31), பசுபதி (22) மற்றும் முத்தரசன் (32) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது நடந்தது
    • போலீஸ்காரர்களை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்கினி ஆற்றில் மணல் கடத்துவதாக கறம்பக்குடி போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது.புகார்களின்படி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரங்கிய பட்டு பாலாஆடி காத்தான் கோவில் அருகே மணல் கடத்தி வந்த சரக்கு வேனை தடுக்க முயன்றனர். அப்போது மணல் கடத்தி வந்த வேனுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் காரர்கள் தடுக்க முயன்ற போலீஸ்காரர் ராஜேஷ், வீரபாண்டி ஆகியோரை தாக்கி விட்டு மணல் வண்டியை தப்ப முயற்சித்தனர்.இருப்பினும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். மீண்டும் மணல் கடத்தும் கும்பல் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உதவியுடன் விக்கி என்பவரை (வயது 28) மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடவாதி ஆவனாண்டி அறிவழகன், அகிலன், கவினேசன், ரமேஷ், கருப்பையா, செல்வராஜ் ஆகிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தும் கும்பலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    • தமிழக அரசு தற்போது நேரடியாக மணல் விற்பனை செய்கிறது.
    • தமிழக அரசின் ஆணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்கப்படுகிறது.

    மதுரை:

    திருச்சியைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு தற்போது நேரடியாக மணல் விற்பனை செய்கிறது. தமிழக அரசின் ஆணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்கப்படுகிறது. ஆனால் இது தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு கிடையாது.

    இவ்வாறு முறையாக அளவீடு செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுவதால், அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. முறைகேடுகளும் நடக்க காரணமாகின்றன. கியூபிக், மெட்ரிக் அளவில் மணல் விற்பனை செய்வதுதான் சரியாக இருக்கும்.

    இதனை முறைப்படுத்தக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மணல் விற்பனை செய்ய தரநிர்ணய அளவீட்டை உருவாக்கி, அதன் அடிப்படையில் மணல் விற்பனையை செய்யவும், யூனிட் அளவில் விற்க தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஒரு யூனிட் என்பது 2.83 கியூபிக் மீட்டர் ஆகும். எனவே விதிகளின்படிதான் மணல் விற்பனை நடக்கிறது என்றார்.

    அதற்கு மனுதாரர் நேரில் ஆஜராகி, மெட்ரிக் அளவு முறை விதிகள், மணல் விற்பனையில் முழுமையாக பின்பற்றப்படவில்லை. தோராயமாகத்தான் மணல் அளவீடு உள்ளது. இதனால் அரசுக்கு ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    இருதரப்பு வாதங்க ளையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இன்று அதே நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.

    ×